Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது

மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது

824
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மலேசியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறது.

மலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது. அதைத் தொடர்ந்து “பெர்சாமா மலேசியா” (Bersama Malaysia) என்ற திட்டத்தின் கீழ் அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் 2023-ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் பயிற்சித் திட்டங்களையும் வழங்கவிருக்கிறது.

இதன்மூலம், மலேசியர்களுக்கும், வணிகங்களுக்கும் கூடுதலான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படும்.

#TamilSchoolmychoice

இந்த கூட்டுப் பயிற்சியில் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியம் (எச்ஆர்டிஎஃப்), மலேசிய அரசாங்க சேவையின் நவீன மயமாக்கல், நிருவாகம் மற்றும் திட்டமிடல் பிரிவு (மாம்பு), பெட்ரோனாஸ் போன்ற அரசு இலாகாக்களும் இந்தத் திட்டத்தில் இணைகின்றன.

மேலும் சில அனைத்துலக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மைக்ரோசோப்ட் தனது மலேசியத் திட்டங்களை செயல்படுத்தும்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 21-ஆம் தேதி பிரதமர் மொகிதின் யாசின் முன்னிலையில் நடைபெற்றது.