Home கலை உலகம் “அடங்காதே” – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகிறது

“அடங்காதே” – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகிறது

594
0
SHARE
Ad

சென்னை : இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் படப்பிடிப்பு முடிந்தாலும் வெளியீடு தாமதமாகிக் கொண்டே போன படம் “அடங்காதே”. தற்போது இந்தப் படம் ஒரு வழியாக முடிவடைந்து தணிக்கைச் சான்றிதழைப் பெற்றிருப்பதாகவும் வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் அந்தப் படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

வட இந்தியாவின் காசி நகரத்தில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் வட இந்திய நடிகை மந்த்ரா பேடியும் இணைந்துள்ளார்.

நடிகர் சரத் குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்கியிருப்பவர் சண்முகம் முத்துசாமி. இவருக்கு “அடங்காதே” முதல் படமாகும்.

#TamilSchoolmychoice

அண்மையில் விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படத்தின் வசனங்களையும் சண்முகம் முத்துசாமி எழுதியிருந்தார்.