Home One Line P1 கொவிட்-19: தொற்று விகிதம் சரிவைக் கண்டுள்ளது

கொவிட்-19: தொற்று விகிதம் சரிவைக் கண்டுள்ளது

810
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று விகிதம், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சரிவை பதிவு செய்தது.

இந்த எண்ணிக்கை புதன்கிழமை 1.15- ஆக குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 1.16-ஆக இருந்தது.

கிளந்தான், கோலாலம்பூர், மலாக்கா, பகாங், சபா மற்றும் சரவாக் ஆகியவை 1.0-க்கும் மேற்பட்ட தொற்று விகிதங்களை பதிவு செய்துள்ளன. இதில் ஜோகூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா மற்றும் புத்ராஜெயா ஆகியவையும் அடங்கும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பினாங்கு, பேராக் மற்றும் லாபுவான் ஆகியவை 1.0 க்கும் குறைவான தொற்று விகிதங்களை பதிவு செய்தன.

கடந்த ஜனவரி மாதம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பதிவான மிகக் குறைவான தொற்று விகிதம் மார்ச் 3 அன்று, அதாவது 0.81- ஆக இருந்தது.