Home One Line P1 கொவிட்-19: ஒரு சம்பவம் பதிவானாலே பள்ளிகள் மூடப்படும்!

கொவிட்-19: ஒரு சம்பவம் பதிவானாலே பள்ளிகள் மூடப்படும்!

927
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டுதலின் கீழ் ஒரு கொவிட் -19 சம்பவத்தை பதிவு செய்யும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.

இந்த உத்தரவு ஏப்ரல் 21 நடைமுறைக்கு வந்துள்ளது என்றும், அமைச்சர் ராட்ஸி ஜிடின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், துணை கல்வி அமைச்சர் மா ஹாங் சூன் தெரிவித்தார்.

“தொற்று சம்பவங்கள் உள்ள பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும். பள்ளிகள் முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்யப்படும். அதே போல் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேவையற்ற பீதி மற்றும் தவறான புரிதலைத் தடுக்கும் இது தடுக்கும்,” என்று மா சின் சியூ டெய்லிக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இயங்கலை கற்றலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பாதிக்கப்பட்ட பள்ளிகளை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியுமா, அல்லது அவை மூடப்படுவதை நீட்டிக்க முடியுமா என்பதை மாவட்ட சுகாதார அதிகாரி தீர்மானிப்பார் என்று அமைச்சர் கூறினார்.