Home நாடு கெகெஎம்எம்: தலைவர்களின் சமூகப் பக்கங்களை தொடர அறிவுறுத்தவில்லை

கெகெஎம்எம்: தலைவர்களின் சமூகப் பக்கங்களை தொடர அறிவுறுத்தவில்லை

581
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமான சமூக ஊடகப் பக்கங்களை தொடர அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகளை அதன் அமைச்சகம் மறுத்துள்ளது.

“அத்தகைய உத்தரவு அமைச்சரால் (சைபுடின் அப்துல்லா) வெளியிடப்படவில்லை,” என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பரலாகிய சமூக ஊடக இடுகைகளில், சைபுடின், துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் மற்றும் தலைமைச் செயலாளர் முகமட் மென்டெக் ஆகியோருக்கு சொந்தமான முகநூல் , இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் கணக்குகளில் பின் தொடருமாறு ஊழியர்களிடம் கூறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

ஊழியர்களிடம் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இந்த உத்தரவுகள் சமூக ஊடகப் பயனர்களிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. ஓர் ஊழியரின் சொந்த கணக்குகளிலிருந்து, சம்பந்தப்பட்ட கணக்குகளை தொடர உத்தரவிட அமைச்சகத்திற்கு உரிமை உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.