Home நாடு 5ஜி – அமைச்சர்களிடையே மோதல்! சர்ச்சைகள்!

5ஜி – அமைச்சர்களிடையே மோதல்! சர்ச்சைகள்!

794
0
SHARE
Ad
சாஹிடி சைனுல் அபிடின்

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நாட்டின் சில பகுதிகளிலும் அரசாங்கத்தின் புதிய தொலைத் தொடர்பு தொழில்நுட்பமான 5-ஜி (5G) என்னும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் அறிமுகம் கண்டது.

இணைய சேவையை மிக விரைவாக வழங்கும் தொழில்நுட்பம் இதுவாகும்.

எனினும், இந்தத் தொழில் நுட்பம் ஒரே நிறுவனத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

தொடர்பு, பல்ஊடக துணையமைச்சரான சாஹிடி சைனுல் அபிடின் இதன் தொடர்பில் நிதியமைச்சர் தெங்கு சாப்ருலும், தொடர்பு பல்ஊடகத் துறையின் முன்னாள் அமைச்சர் சைபுடின் அப்துல்லாவும் இரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும் செயலை வன்மையாகக் கண்டித்தார்.

துணையமைச்சர்களைக் கூட இதுகுறித்த பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ளாமல் முடிவெடுத்திருக்கும் அந்த 2 அமைச்சர்களையும் சாஹிடி சாடினார்.

5ஜி தொழில் நுட்ப விநியோகத்தைக் கையாள டிஜிடல் நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) என்னும் நிறுவனத்திற்கு முழு அதிகாரத்தையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.

டிஎன்பி நிறுவனம் 1 எம்டிபி போன்று ஊழலின் மையமாக உருவெடுக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமும் சாடியிருக்கிறார்.

இதுகுறித்த முழுவிவரங்கள் தன்னிடம் தெரிவிக்கப்படாத  காரணத்தினாலேயே நாடாளுமன்றத்தில் தான் முரண்பாடான தகவல்களை வழங்க நேர்ந்தது எனவும் சாஹிடி கூறியிருக்கிறார்.