எய்லாட் (இஸ்ரேல்) : கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12) இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் இந்தியாவின் ஹார்னாஸ் கவுர் சாந்து முதலிடத்தைப் பிடித்து மகுடம் சூட்டப்பட்டார்.
இந்திய நேரப்படி நேற்று திங்கட்கிழமை காலையில் ஹார்னாஸ் சாந்து மகுடம் சூட்டப்பட்ட செய்திகள் வெளியானது முதல் இந்திய ஊடகங்கள் அவரைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றன.
காரணம், 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹார்னாஸ் சாந்து இந்தப் பட்டத்தை வென்றிருப்பதுதான்!
இதற்கு முன்னர் கடைசியாக இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றது 2000-ஆம் ஆண்டில்தான்! அப்போது லாரா டத்தா அந்தப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.
அதற்கு முன்னர் சுஷ்மிதா சென் 1994-ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.