Home உலகம் டைம் இதழின் 2021-ஆம் ஆண்டுக்கான உலக மாமனிதர் எலென் மஸ்க்

டைம் இதழின் 2021-ஆம் ஆண்டுக்கான உலக மாமனிதர் எலென் மஸ்க்

602
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் புகழ் பெற்ற இதழ் “டைம்”. ஆண்டுதோறும் உலகின் சிறந்த, மாமனிதர்களைத் தேர்ந்தெடுத்து “உலக மாமனிதர்” (Man of the year) என்னும் அங்கீகாரத்தை வழங்கும்.

2021-ஆம் ஆண்டுக்கான உலக மாமனிதராக பிரபல வணிகர் எலென் மஸ்க்கை டைம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

அமெரிக்க வணிகரான எலென் மஸ்க் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்வதிலும் விண்வெளிப் பயணத்திலும் பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.