புத்ரா ஜெயா: உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலென் மஸ்க் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் காணொலி வழி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் இலக்கவியல் அமைச்சர் பாஹ்மி பாட்சில் நேரடியாகவும் அனைத்துலக, தொழில்துறை அமைச்சர் தெங்கு சாப்ருல் காணொலி வழியும் கலந்து கொண்டனர்.
எலென் மஸ்க் தன்னைச் சந்திக்க நேரம் கேட்டதாக அன்வார் இப்ராகிம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மின்சாரக் கார் உற்பத்தித் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலென் மஸ்க் ஆவார்.
மலேசியாவில் அவர் மின்சாரக் கார் உற்பத்தித் துறையில் கணிசமாக முதலீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுவிட்டர் ஊடகத் தளத்தையும் எலென் மஸ்க் அண்மையில் கையகப்படுத்தினார். அதில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.