பாரிஸ் : பிரான்சுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உரையாற்றும்போது “உலகின் பழமையான மொழி ஒரு இந்திய மொழி என்பதை விட பெரிய பெருமை வேறென்ன இருக்க முடியும்?” என்று மீண்டும் தமிழுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இன்று ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படும் பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மோடி பாரிஸ் வருகை தந்திருக்கிறார்.
பிரான்ஸ் அதிபர் மெக்ரோனை நேரில் சந்தித்து அவருடன் விரிவான ஆலோசனைகளையும் நடத்தியிருக்கிறார் மோடி. அங்கு மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதும் வழங்கப்பட்டது.
வழக்கம்போல் பிரான்ஸ் நாட்டில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரை நிகழ்த்தினார்.