Home இந்தியா செந்தில் பாலாஜியின் கைது சட்டத்திற்குட்பட்டதுதான்! சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் கைது சட்டத்திற்குட்பட்டதுதான்! சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி தீர்ப்பு

510
0
SHARE
Ad

சென்னை : அரசியல் ரீதியாக தமிழ் நாடு முழுமையிலும் – சட்ட ரீதியாக அனைத்திந்திய அளவிலும் – பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு.

செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது.

#TamilSchoolmychoice

இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 12-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

*தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.

*ஏற்கனவே வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளில் ஒருவரான பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன்.

*அமலாக்கத் துறை சட்ட விதிகளின்படி தான் கைது செய்துள்ளது.

*செந்தில்பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத்துறை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது.

*செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.