Home நாடு தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை

தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை

667
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் : அடுத்தாண்டு 2022-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்கு கெடா மாநில அரசாங்கம் மீண்டும் விடுமுறை வழங்கியுள்ளது.

இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்தார்.

இருந்தாலும் இது நிரந்தர ஆண்டு விடுமுறை இல்லை. ஒவ்வோர் ஆண்டும் மாநில ஆட்சிக் குழு கூடி, தைப்பூசத்திற்கான விடுமுறையை வழங்குவதா இல்லையா என்ற முடிவை எடுக்கும்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பின் மூலம் தைப்பூசத்தைக் கொண்டாடும் சமூகத்தினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சனுசி தெரிவித்தார்.