Home நாடு பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!

பத்துமலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கினார்!

73
0
SHARE
Ad
பிப்ரவரி 11-ஆம் நாள் பத்துமலைக்கு அன்வார் வருகை தந்தபோது…

பத்துமலை: கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்த பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதைத் தொடர்ந்து பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டவரும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) காலை தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய நடராஜா, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் மூலமாக அந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான கடிதத்தைப் பெற்றதாக அறிவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.