Home நாடு அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள நிலைமைக்கு...

அன்வார் : நேற்று புக்கெட் தீவில் தாய்லாந்து பிரதமருடன் – நாளை கிளந்தான் வெள்ள நிலைமைக்கு நடுவில்!

284
0
SHARE
Ad

புக்கெட் : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தாய்லாந்தின் சுற்றுலாத் தீவுத் தலமான புக்கெட் தீவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

மலேசியா, தாய்லாந்து இடையிலான சுற்றுலாத் துறை வளர்ச்சி, புக்கெட், லங்காவி சுற்றுலா மேம்பாடு, சாடாவ்-புக்கிட் காயு ஹீத்தாம் நெடுஞ்சாலைத் திட்டம், சுங்கை கோலோக்-ரந்தாவ் பாஞ்சாங் இடையிலான பாலம், தென் தாய்லாந்து, தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி ஆகிய வட்டாரங்களின் மேம்பாடு போன்ற பல அம்சங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாக அன்வார் தாய்லாந்து பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து தெரிவித்தார்.

இதற்கிடையில் மோசமடைந்து வரும் வெள்ள நிலைமையை நேரில் கண்டறிவதற்காக கிளந்தான் மாநிலத்திற்கு நாளை வியாழக்கிழமை அன்வார் வருகை தருகிறார்.