Home நாடு தீபாவளி  விடுமுறையில் 3 இலட்சம் மலேசியர்கள் தாய்லாந்து நோக்கி பயணம்!

தீபாவளி  விடுமுறையில் 3 இலட்சம் மலேசியர்கள் தாய்லாந்து நோக்கி பயணம்!

217
0
SHARE
Ad

பாடாங் பெசார் : நீண்ட வார இறுதி விடுமுறை என்றால் அண்டை நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்வது மலேசியர்களின் வழக்கம். இந்த முறை தீபாவளி விடுமுறையின் போது, சுமார் 300,000 மலேசியர்கள் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொங்லாவில் உள்ள மலேசியாவின் தூதரக அதிகாரி அகமட் ஃபாஹ்மி அஹ்மத் சார்காவி, மலேசியர்கள் பொதுவாக புக்கிட் காயு ஹித்தாம், பாடாங் பெசார் மற்றும் ரந்தாவ் பஞ்ஜாங் (கிளந்தான்) எல்லை வழியாக தாய்லாந்திற்கு செல்வதாகக் கூறினார்.

“பொதுவாக பல பயணிகள் புக்கிட் காயு ஹித்தாம் வழியாக தாய்லாந்தில் நுழைகின்றனர். புக்கிட் காயு ஹித்தாம் சொங்க்லா மாநிலத்தில் உள்ள சாடாவ் நகரத்துடன் எல்லையைக் கொண்டுள்ளது. தாய்லாந்து செல்ல விரும்பும் எந்தவொரு மலேசியரும் தேவையான ஆவணங்களை சரியாகத் தயார் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர், இதற்குள் வாகன காப்பீடு மற்றும் கார் உரிமச் சான்றிதழின் மூல நகல் ஆகியவை அடங்கும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் பதிவுகளின் அடிப்படையில், 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 3.7 மில்லியன் மலேசிய சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

பொதுவான வாகனங்களிலோ அல்லது உயர்சக்தி கொண்ட மோட்டார் சைக்கிள்களிலோ தாய்லாந்தில் நுழையும் மலேசியர்கள் சாலையில் கவனமாக இருக்க வேண்டும் என ஃபாஹ்மி அறிவுறுத்தினார், ஏனெனில் மலேசியர்கள் அங்கே மோசமான விதத்தில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

“மலேசியர்கள் தாய்லாந்தில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளை மீறி மிகுந்த வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது குறித்து நிறைய புகார்கள் கிடைத்துள்ளது. தாய்லாந்தில், மலேசியக் கார்களால் விபத்துகள் ஏற்படவேண்டாம் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.