Home Photo News விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் – துணைப் பிரதமர் சாஹிட்…

விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் – துணைப் பிரதமர் சாஹிட்…

180
0
SHARE
Ad

ஷா ஆலாம்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் நடத்திய விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார். அவருடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடியும் கலந்து கொண்டார்.

மேலும் பல அமைச்சர்களும் மாற்றுக் கட்சி தலைவர்களும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர். அம்னோவின் முன்னாள் அமைச்சர்கள், கைரி ஜமாலுடின், ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் ஆகியோரும் விருந்துபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.

மஇகா மத்திய செயலவையினரும் இந்த விருந்துபசரிப்பில் பங்கு பெற்றனர். முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரியும் விக்னேஸ்வரன் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு வருகை தந்தார்.

#TamilSchoolmychoice