Home கலை உலகம் அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் ஆங்கில மொழிப் பட்டறை!

அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் ஆங்கில மொழிப் பட்டறை!

1192
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ உறுதுணை தனது சமுதாய கடப்பாட்டின் முயற்சியாக ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வரும் சனிக்கிழமை ஜூன் 30-ஆம் தேதி ‘Office Communications and Writing Skills’ எனும் தலைப்பில் பட்டறை ஒன்றி நடத்தவிருக்கிறது.

புக்கிட் ஜாலில் அஸ்ட்ரோவில் இப்பட்டறை காலை மணி 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இப்பட்டறையை அமெரிக்கா மேற்கு கனெக்டிகட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அனாம் கே.கோவர்தன் நடத்தவிருக்கிறார்.

இப்பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை astro_ulagam@astro.com.my எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இப்பட்டறைக்கு 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்தை நாடுங்கள்.