புதுடெல்லி – அந்தமான் மற்றும் நோக்கோபார் தீவுகளில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிட்டத்தட்ட 800 சுற்றுலாப் பயணிகள் ஹேவ்லாக் தீவில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்க இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பித்ரா, பங்காராம், கும்பிர் மற்றும் எல்சியு 38 ஆகிய நான்கு கப்பல்கள் அந்தமான் விரைந்துள்ளன.