Home Featured நாடு தேசிய நிகழ்ச்சியில் கூட அரசியல் – மகாதீர் விமர்சனம்!

தேசிய நிகழ்ச்சியில் கூட அரசியல் – மகாதீர் விமர்சனம்!

654
0
SHARE
Ad

mahathir-mohamad

கோலாலம்பூர் – புதிய மாமன்னரின் பதவி ஏற்பு விழா அழைப்பிதழ் திரும்பப் பெறப்பட்டது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், தேசிய நிகழ்ச்சிகள் கூட இப்போது அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து இன்று வியாழக்கிழமை தனது வலைப்பூவில் மகாதீர் தெரிவித்துள்ள கருத்தில், வரும் டிசம்பர் 13-ம் தேதி, கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் புதிய மாமன்னர் பதவி ஏற்கவுள்ள சடங்கில் கலந்து கொள்ளுமாறு தனக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி அரச முத்திரைடன் காப்பாளரிடமிருந்து அழைப்பிதழ் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எந்த ஒரு அரசியல் கட்சிகளின் தொடர்பும் இல்லாத தேசிய நிகழ்ச்சி என்பதால், நான் வருகிறேன் என்று கூறினேன்”

“தேசிய நிகழ்ச்சிகள் கூட இப்போது அரசியல் கட்சியின் ஒரு பகுதி ஆகிவிட்டது போல் தெரிகின்றது” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.