Home Featured கலையுலகம் அம்மா இரங்கல் பாடல்: இளையராஜாவுக்குச் சம்பந்தமில்லை!

அம்மா இரங்கல் பாடல்: இளையராஜாவுக்குச் சம்பந்தமில்லை!

1858
0
SHARE
Ad

amma

கோலாலம்பூர் – மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இசைஞானி இளையராஜா  பாடல் ஒன்றை இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளதாகத் தற்போது வாட்சாப்பில் ஒரு பாடல் பகிரப்பட்டு வருகின்றது.

ஆனால் அப்பாடலுக்கும், இளையராஜாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

#TamilSchoolmychoice

உண்மையில் அப்பாடலை ஆர்யா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இசையமைத்து, இலங்கை கவிஞர் அஸ்மின் பாடல்வரிகள் எழுதியுள்ளார்.

கேட்பதற்கு இளையராஜாவின் குரல் போலவே வர்சனின் குரல் இருப்பதால், இளையராஜா தான் இசையமைத்துப் பாடியுள்ளார் எனத் தற்போது தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

அப்பாடலை இங்கே காணலாம்:-