Home Featured நாடு அடுத்தடுத்து 2 பெட்ரோல் நிலையங்களில் துணிகரக் கொள்ளை!

அடுத்தடுத்து 2 பெட்ரோல் நிலையங்களில் துணிகரக் கொள்ளை!

594
0
SHARE
Ad

bikerகோலாலம்பூர் – மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று சுமார் 20 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் நிலையங்களில் கிட்டத்தட்ட 7000 ரிங்கிட்டிற்கும் மேல் மதிப்புள்ள ரொக்கத்தையும், பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த காசாளரை ஆயுதத்தைக் காட்டி மிரட்டி 7000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களையும், ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் மெகாட் மொகமட் அமினுடின் மெகாட் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

அதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த நன்கொடைப் பெட்டியில் இருந்த 200 ரிங்கிட்டையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என மெகாட் அலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் நடந்து அடுத்த 10 நிமிடங்களில் பூச்சோங் பண்டார் கின்ராராவில் உள்ள பெட்ரோல் நிலையத்தை அடைந்த அக்கும்பல், அங்கு பணியில் இருந்த ஒருவரைக் காயப்படுத்தியதோடு, அங்கு ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மிரட்டி 1000 ரிங்கிட்டைப் பறித்துச் சென்றுள்ளனர்.

தற்போது அக்கும்பலைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மெகாட் அலியாஸ் தெரிவித்துள்ளார்.