Home Featured நாடு ஜெயலலிதா அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா குழுவினர் கையெழுத்து!

ஜெயலலிதா அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா குழுவினர் கையெழுத்து!

649
0
SHARE
Ad

subra-jayalalithaa-condolence-book-1

கோலாலம்பூர் – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை முன்னிட்டு இங்குள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில், இன்று மாலை 6.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்  கையெழுத்திட்டு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில்  “ஆண் ஆதிக்கம் மிகுந்த தமிழக அரசியலில் குடும்பப் பின்னணி, அரசியல் பின்னணி என எதுவும் இல்லாமல், தனித்து நின்று ஒரு பெண்மணியாக, வாகை சூடியவர் அமரர் ஜெயலலிதா. அதிமுக பல போராட்டங்களை சந்தித்தபோது, தனது திறமைகள், ஆளுமைகள் ஆகியவற்றின் காரணத்தினால்தான் ஓர் இரும்புப் பெண்மணியாக, தனிப் பெரும் தலைவராக அவரால் அந்தக் கட்சியை வழிநடத்திச் செல்ல முடிந்தது, தமிழக முதல்வராகவும் பல தவணைகள் பதவி வகிக்க முடிந்தது” என சுப்ரா புகழாரம் சூட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

subra-jayalalithaa-condolence-book-2

ஜெயலலிதாவுக்கான அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில் டாக்டர் சுப்ராவுடன், துணை இந்தியத் தூதர் நிகிலேஷ், மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல், துணையமைச்சர் எம்.சரவணன், மஇகா தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ்.மோகன், மகளிர் பகுதித் தலைவி மோகனா முனியாண்டி, மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ முனியாண்டி மற்றும் மஇகாவினர்….

டாக்டர் சுப்ராவுடன் மற்ற மஇகா தலைவர்களும் இணைந்து இன்று ஜெயலலிதாவுக்கான அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

மஇகா குழுவினரின் வருகையின் போது மலேசியாவுக்கான துணை இந்தியத் தூதர் நிகிலேஷ் சந்திர கிரி உடனிருந்தார்.