Home Featured நாடு குவாங் எங் பதவி விலக வேண்டும் – பினாங்கு அம்னோ போர்கொடி

குவாங் எங் பதவி விலக வேண்டும் – பினாங்கு அம்னோ போர்கொடி

750
0
SHARE
Ad

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100ஜார்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை பதவி விலகுமாறு கூறும் மனு ஒன்றை, அம்மாநிலத்தின் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பினாங்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இது குறித்து பினாங்கு அம்னோவின் தலைவர் சைனல் அபிடின் ஓஸ்மான் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சருக்கு எதிராக எங்களது கோரிக்கைகள் தொடரும். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு முடியும் வரை அவர் விடுப்பில் செல்ல வேண்டும். லிம் பதவி விலக மறுப்பது, முதலமைச்சர் அலுவலகத்தைக் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice