Home Featured நாடு மசூதியை விட மற்ற வழிபாட்டுத்தளங்கள் உயரமாக இருக்கக் கூடாது: சிலாங்கூர் அரசு

மசூதியை விட மற்ற வழிபாட்டுத்தளங்கள் உயரமாக இருக்கக் கூடாது: சிலாங்கூர் அரசு

692
0
SHARE
Ad

BatuCavesகோலாலம்பூர் – சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் வழிகாட்டி கையேடின் மூன்றாம் பதிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில தரமான திட்டமிடல் ஏடு ஆகியவற்றில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிய வழிபாட்டுத் தளங்கள் நிறுவுவதில் பல புதியக் கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து, தற்போது அது மறு ஆய்வு செய்யப்படவிருக்கிறது.

அதன் படி, இஸ்லாமியர்களின் வீடுகள் இருக்கும் பகுதியில், சுமார் 50 மீட்டர் தொலைவு வரை, இஸ்லாம் அல்லாதவர்களின் வழிப்பாட்டுத்தளங்கள் நிறுவக்கூடாது என்றும், 200 மீட்டர் பரப்பளவிலுள்ள குடியிருப்பாளர்களின் அனுமதியோடு தான் புதிய இஸ்லாம் அல்லாதோரின் வழிபாட்டுத்தளங்கள் கட்டப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிப்பதாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களோ, தேவாலயங்களோ அப்பகுதியில் அமைந்திருக்கும் மசூதியின் உயரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும் என்றும், வர்த்தகப் பகுதிகளில் இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தளங்கள் கட்டக்கூடாது என்றும் கூறப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் வழிகாட்டி கையேடின் மூன்றாம் பதிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில தரமான திட்டமிடல் ஏடு ஆகியவற்றை சிலாங்கூர் மாநகரம் மற்றும் தேசிய திட்டமிடல் துறையிடமிருந்து 200 ரிங்கிட் கொடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில மூத்த ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், கடந்த ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் இந்த கையேடில் உள்ள இஸ்லாம் அல்லாதோரின் வழிபாட்டுத்தளங்கள் பற்றிய பரிந்துரைகள் அனைத்தும், மாநில இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான கமிட்டியின் மூலம் மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தக் கையேடில் உள்ளவை, ஏற்கனவே இருக்கும் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தளங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருக்கிறார்.