Home Featured இந்தியா உச்சகட்டப் பாதுகாப்பில் இந்திய விமான நிலையங்கள்!

உச்சகட்டப் பாதுகாப்பில் இந்திய விமான நிலையங்கள்!

856
0
SHARE
Ad

mumbai-airport

புதுடில்லி – ஒரே நேரத்தில் கடத்தல்கள் அரங்கேற்றப்படப் போகின்றன என்ற தகவல்கள் அடங்கிய இணையப் பரிமாற்றங்களின் காரணமாக, இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களான சென்னை, ஹைதராபாத், மும்பை விமான நிலையங்கள் உச்ச கட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இந்தத் தகவல்கள் வதந்தியாகவோ, புரளியாகவோ இருக்கலாம் என்றாலும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, பலத்த பாதுகாப்புகளை மேற்குறிப்பிட்ட 3 விமான நிலையங்களிலும் அமுல்படுத்தியிருக்கின்றன.