Home Featured நாடு அஸ்ட்ரோ அலைவரிசைகளைத் திருட்டுத்தனமாக வழங்கி வந்த கும்பல் கைது!

அஸ்ட்ரோ அலைவரிசைகளைத் திருட்டுத்தனமாக வழங்கி வந்த கும்பல் கைது!

690
0
SHARE
Ad

Astro-logo-slider

கோலாலம்பூர் – அஸ்ட்ரோ அலைவரிசைகளை மாதந்தோறும் குறைவான கட்டணத்தில், திருட்டுத்தனமாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி (online streaming and card sharing) வழங்கி வந்த 6 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.

தலைநகர் மற்றும் ஜோகூர் பாருவில் கடந்த வியாழக்கிழமை, நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 39 வயது முதல் 53 வயது வரையிலான அந்த 6 பேரையும் காவல்துறைக் கைது செய்ததாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவுத் தலைவர் டத்தோ அகிரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர்களிடமிருந்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளைத் திருட்டுத்தனமாக வழங்கத் தேவையான கருவிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் இக்கும்பல் அஸ்ட்ரோ அலைவரிசைகளை நாடு முழுவதும் 30,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருப்பதோடு, மாதம் 900,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டியிருப்பதாகவும் அக்ரில் சானி குறிப்பிட்டார்.

காப்புரிமைச் சட்டம் 1987, பிரிவு 41-ன் கீழ், அவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என்றும், அதற்காக நேற்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அக்ரில் தெரிவித்தார்.