Home கலை உலகம் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது!

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது!

629
0
SHARE
Ad

ActorJaiசென்னை – இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படமான ‘பார்ட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுவிட்டதால், படக்குழு கடந்த இரண்டு நாட்களாக குடியும் கொண்டாட்டமுமாக இருந்து வருகின்றது.

இந்தக் கொண்டாட்டம் குறித்தத் தகவல்களை வெளிப்படையாகவே சம்பந்தப்பட்ட நடிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு தாஜ் நட்சத்திர விடுதியில் இரவு விருந்து முடித்துவிட்டு, நடிகர் ஜெய்யும், வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரனும், சொகுசுக் காரில் பறந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நடிகர் ஜெய் அதிவேகமாகக் காரை ஓட்டியிருக்கிறார்.

இந்நிலையில், அடையார் மேம்பாலம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியிருக்கிறது.

காரின் உள்ளே உச்சக்கட்ட போதையில் இருந்த ஜெய்யும், பிரேம்ஜியும் எழுந்திருக்க முடியாத நிலையில், போதையில் இருந்துள்ளனர்.

பின்னர் அவ்வழியாகச் சென்றோர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கவே,பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஜெய் மது அருந்தி கார் ஓட்டியதை உறுதிப்படுத்திய பின்னர் அவரைக் கைது செய்து  பின்னர் பிணையில் விடுவித்திருக்கிறது.

ஜெய் மேல் ஏற்கனவே குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இரண்டு வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.