Home நாடு சிறை செல்லும் வழியில் அன்வார் கார் விபத்து!

சிறை செல்லும் வழியில் அன்வார் கார் விபத்து!

750
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர் – சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இரத்த அழுத்தம் காரணமாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சை முடிந்து சுங்கை பூலோ சிறைக்கு கொண்டு செல்லப்படும் வழியில்,  முன்னே சென்ற காருடன் மோதுவதைத் தடுக்க, அன்வாரை ஏற்றிச் சென்ற கார் திடீர் நிறுத்தப்பட்டது.

இதில் அன்வார் உட்பட காரின் உள்ளே இருந்தவர்களுக்கு அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும், யாருக்கும் இச்சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.