Home நாடு ‘ஓரினச்சேர்க்கையாளர் விழா’ – குடிநுழைவு இலாகா கடும் எச்சரிக்கை!

‘ஓரினச்சேர்க்கையாளர் விழா’ – குடிநுழைவு இலாகா கடும் எச்சரிக்கை!

957
0
SHARE
Ad

mustafar ali-immigration DGகோலாலம்பூர் – வரும் செப்டம்பர் 30-ம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்க்கையாளர் விழா’-வின் பங்கேற்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்குத் தடை விதிக்கப் போவதாக மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்திருக்கிறது.

இது குறித்து குடிநுழைவு இலாகாவின் பொது இயக்குநர் முஸ்தாபர் அலி கூறுகையில், “இவ்விழாவில் பங்கேற்ப்பதற்காக யாரேனும் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்தால், குடிநுழைவுச் சட்டம் 1959, பிரிவு 8-ன் கீழ், என்டிஎல் (Not to Land) சட்டப்படி அறிக்கை விடுக்கப்படும்”

“பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய, இறையாண்மையைக் கெடுக்கக் கூடிய, ஆரோக்கியமற்ற, முறையற்ற அது போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்யும் எந்த ஒரு நபரையும் குடிநுழைவு இலாகா ஒருபோதும் அனுமதிக்காது” என்று முஸ்தாபர் அலி கூறியிருக்கிறார்.