Home நாடு இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

395
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது. எனினும் இந்த விசா அனுமதியில்லாத நடைமுறை பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படலாம் என்றும் அன்வார் தெரிவித்தார். உதாரணமாக, குற்றவியல் பின்னணி கொண்டவர்களுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய விசா அனுமதி மறுக்கப்படலாம்.

உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இந்த நடைமுறை குறித்த முழு விவரங்களை அறிவிப்பார் என்றும் அன்வார் கூறினார்.