Home One Line P1 குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு குற்றவியல் பதிவுகள் உள்ளன

குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு குற்றவியல் பதிவுகள் உள்ளன

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவருக்கு குற்றவியல் பதிவு மற்றும் இரகசிய கும்பலுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சோதனையின்போது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், போர்டு முஸ்டாங், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஆடி ஆகிய சொகுசு கார்களை புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்ததது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் ஓர் அரசு ஊழியராகப் பணிபுரிந்தபோது தனது குற்றச் செயல்களைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“அவர் இந்த குற்றங்களை அந்த கும்பலின் ஒரு பகுதியாக இருந்து செய்ததாக நம்பப்படுகிறது. மேலும் அவர் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் முகவரால் வழிநடத்தப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டார். அந்த அதிகாரி ஓர் இரகசிய கும்பலுடன் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள், ” என்று விசாரணைகளுக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, 28 குடிநுழைவுத் துறை பணியாளர்கள், 17 வெளிநாட்டு தொழிலாளர் முகவர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உட்பட 50 நபர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்டிற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் குடியேற்ற முத்திரைகளை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு தொழிலாளர் முகவர்களில் ஒருவர் காவல் துறையின் தேடும் பட்டியலில் உள்ளார். மேலும், அவர் கார் திருட்டு குற்றங்களில், சதித்திட்டம் சம்பந்தப்பட்ட மூன்று வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் நம்பப்படுகிறது.