இது குறித்து பேசிய அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், இதனை ஆய்வு செய்ய நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுக்கு வருகிற வியாழக்கிழமை வரையிலும் கால அவகாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“வரவு செலவு திட்டம் குறித்தும் பேசினோம். இன்னமும் நாம் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கிறோம், ஆனால், எங்களது இரண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுகிறோம். இதனை ஆய்வு செய்ய வியாழக்கிழமை வரை அவர்களுக்கு நேரம் உள்ளது. இந்த இரண்டு பரிந்துரைகளும் வரவு செலவு திட்ட இறுதி அறிக்கையில் இணைக்கப்படும் என்று நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்த இரண்டு பரிந்துரைகள் என்னவென்று அகமட் மஸ்லான் விரிவாகக் கூறவில்லை.
ஆனால், அவர் நஜிப் ரசாக் முன்வைக்கும் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து 10,000 ரிங்கிட் திரும்பப் பெறுவதையும், கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து பேசுவதாகக் கருதப்படுகிறது.