Home One Line P2 சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி மறைவு

சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி மறைவு

627
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் புற்று நோய் காரணமாக மதுரையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபா் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் தவசி, ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துள்ளாா்.

சிகிச்சையைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பிரபலங்கள் அவருக்கு உதவ முனவந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் பா. சரவணன், தனது மருத்துவமனையில் வைத்து நடிகா் தவசிக்கு இலவசமாக சிகிச்சையளித்து வந்தார்.

#TamilSchoolmychoice

உடல் மெலிந்து அடையாளமே மாறிப்போன தவசியின் புகைப்படம் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து பலர் தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்தனர். நடிகர் தவசிக்கு சக நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நிதி அளித்து உதவி புரிந்தனர்.

மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 60.