கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபியைப் போலவே, கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும், புகாயா மாநில சட்டமன்றத்திலும் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரை அணுகும் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் கூறினார்.
“பிரிவு 150 படி அமைச்சரவை, பத்து சாபியில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரிடம் அறிவுறுத்துமாறு பிரதமரை அமைச்சரவை அறிவுறுத்தியது.
“சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் புகாயா சட்டமன்றம் மற்றும் கிரிக் நாடாளுமன்றத்தில் இதே போன்ற தொற்று அபாயம்ஹ்ல்கள் இருந்தால், அவசரநிலை நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.
இடைத்தேர்தலைத் தவிர்ப்பதற்காக சபா பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதியில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னர் அண்மையில் ஒப்புக் கொண்டார்.