கோலாலம்பூர் – அஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளிக்
கொண்டாட்டம் நிகழ்ச்சி இன்று செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11
மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், இவ்விழாவை நடிகை ராய் லஷ்மி அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார்.
இன்று, 23-ம் தேதி, சனிக்கிழமை அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில், விரைவில் ஒளியேறவுள்ள ‘சினிமா எனும் நதியினிலே’ அறிமுகம் விழா மற்றும் ‘அஸ்ட்ரோ உறுதிணை விருது’ விழா இடம்பெறவிருக்கிறது. அதன் பின்னர், பின்னணி பாடகி ஹரிணி கலந்து கொள்ளும் ‘தீபாவளிக் கொண்ட்டாடம் கலை நிகழ்ச்சி’ இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கலைஞர்களும் கலந்து தங்களுடைய படைப்புகளை வழங்கவிருக்கிறார்கள்.
இறுதி நாளான 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு நாடன போட்டி, மிமீகிரி போட்டி, கலைஞர்களின் சந்திப்பு, உள்ளூர் பாடகி புனிதா ராஜாவின் ஆல்பம் இசை வெளியீடு, விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களின் சந்திப்பு மற்றும் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளது.
அதுமட்டுமின்றி, இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள், அஸ்ட்ரோ சர்க்கிள் (Astro Circle) ஏற்று நடத்தும் போட்டிகளிலில் கலந்து விமான பயணச்சீட்டுகள், எச்.டி தொலைக்காட்சி, பிளே ஸ்டேசன் ஃபார் சிலிம் (Play station 4 Slim) போன்ற பல அரிய பரிசுகளைத் தட்டிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.
படங்கள்: அஸ்ட்ரோ உலகம்