கோலாலம்பூர், மார்ச் 27- இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் ‘மைக்ரோசொப்ட்’ ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
இவ் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக கருதப்படும் விண்டோஸ் புளு (Windows Blue) எனும் புத்தம் புதிய இயங்குதளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வியங்குதளமானது 32-பிட் மற்றும் 64-பிட் பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.