Home இந்தியா திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது

1588
0
SHARE
Ad

திருவண்ணாமலை – உலகம் எங்கும் உள்ள இந்துக்கள் இன்று கொண்டாடி மகிழும் திருக்கார்த்திகை பெருநாளை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் ஆலயத்திலும், திருவண்ணாமலையில் உள்ள 2668 அடி உயர மலை உச்சியிலும் மகாதீபம் மலேசிய நேரப்படி இரவு 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6.00 மணி) ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் காட்சி

இலட்சக்கணக்கான பக்தர்கள் இதனை முன்னிட்டு திருவண்ணாமலையில் குழுமியிருந்தனர்.

திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் இரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுமார் 25 இலட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குழுமியதாக மதிப்பிடப்படுகிறது.