Home கலை உலகம் “காப்பான்” – சூர்யா, கே.வி.ஆனந்த் இணையும் அடுத்த படம்

“காப்பான்” – சூர்யா, கே.வி.ஆனந்த் இணையும் அடுத்த படம்

1029
0
SHARE
Ad

சென்னை – நடிகர் சூர்யாவை வைத்து அயன் மற்றும் மாற்றான் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37-வது படமாக அண்மைய சில மாதங்களாக தயாரிப்பில் இருந்து வந்த படத்திற்கு ‘காப்பான்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் முதல் தோற்றம் புத்தாண்டை முன்னிட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்துக்கான தலைப்பை இரசிகர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்குநர் ஆனந்த் ‘மீட்பான், காப்பான், உயிர்கா’ என மூன்று தலைப்புகளைக் கொடுத்து, சமூக ஊடகங்களின் வழி தேர்ந்தெடுக்கச் செய்ததில் ‘காப்பான்’ என்ற பெயரை அதிகமானோர் தேர்ந்தெடுத்தனர்.

#TamilSchoolmychoice

இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் இந்தப் படத்தில் காட்சியளிக்கிறார்.