
ஸ்டோக்ஹோம் – டென்மார்க் நாட்டின் கிரேட் பெல்ட் பிரிட்ஜ் எனப்படும் இடத்தில் கார்ல்பெர்க் பீர் பானத்தை ஏற்றி வந்த சரக்கு இரயில், பயணிகள் இரயிலுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் (மலேசிய நேரம் பிற்பகல் 2.30), புயல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது.
கார்ல்ஸ்பெர்க் பீர் பானங்களை ஏற்றி வந்த இரயிலில் இருந்து பிய்த்துக் கொண்டு பறந்து வந்த ஒரு மறைப்புப் படுதா (tarpaulin) பயணிகள் இரயில் மீது விழுந்ததால், அந்தப் பயணிகள் இரயிலை ஓட்டுநர் திடீரென நிறுத்த முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.