பாக்கு (அசர்பைஜான்) : மலேசிய நேரப்படி நேற்று சனிக்கிழமை (ஜூன் 3) நள்ளிரவு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் டென்மார்க் – செக் குடியரசு இரண்டு நாடுகளும் களமிறங்கின.
அசர்பைஜான் தலைநகர் பாக்குவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டென்மார்க் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் செக் குடியரசைத் தோற்கடித்து டென்மார்க் அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியது.
இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் டென்மார்க், இங்கிலாந்துடன் மோதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, அபாரமாக விளையாடி 4-0 கோல்களில் உக்ரேனைத் தோற்கடித்தது.
பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகியவையே கால் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வான 8 குழுக்களாகும்.
இதில் டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருக்கின்றன.