Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 4 – உக்ரேன் 0; அரை இறுதி ஆட்டத்தில் டென்மார்க்கைச்...

ஈரோ 2020 : இங்கிலாந்து 4 – உக்ரேன் 0; அரை இறுதி ஆட்டத்தில் டென்மார்க்கைச் சந்திக்கும் இங்கிலாந்து

951
0
SHARE
Ad
உக்ரேனுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்த இங்கிலாந்து கேப்டன் கேன்…

ரோம் : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்து, அபாரமாக விளையாடி 4-0 கோல்களில் உக்ரேனைத் தோற்கடித்தது.

இத்தாலி தலைநகர் ரோம்மில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இங்கிலாந்து குழுத்தலைவர் (கேப்டன்) கேன் 2 கோல்களை அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய நேரப்படி நேற்று சனிக்கிழமை (ஜூன் 3)  நள்ளிரவு நடைபெற்ற கால் இறுதிச் சுற்றுக்கான மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் 2-1 கோல்களில் செக் குடியரசுவைத் தோற்கடித்தது.

இதைத் தொடர்ந்து அரை இறுதி ஆட்டத்தில் டென்மார்க், இங்கிலாந்துடன் மோதும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இங்கிலாந்து ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரை இறுதி ஆட்டம் வரை வந்துள்ளதால் இங்கிலாந்து காற்பந்து இரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உக்ரேன் ஆகியவையே கால் இறுதி ஆட்டத்திற்குத் தேர்வான 8 குழுக்களாகும்.

இதில் டென்மார்க், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகள் அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகியிருக்கின்றன.