Home உலகம் டிரம்ப் – செலன்ஸ்கி – புடின் – வரலாற்று பூர்வ சந்திப்பு நிகழுமா?

டிரம்ப் – செலன்ஸ்கி – புடின் – வரலாற்று பூர்வ சந்திப்பு நிகழுமா?

57
0
SHARE
Ad
விளாடிமிர் செலன்ஸ்கி

இஸ்தான்புல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு சவுதி அரேபியாவுக்கு வருகை தந்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரேன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியும் துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் டிரம்பும் அந்த சந்திப்பில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு டிரம்பும் இந்த சந்திப்பில் இணைந்தால், அந்த 3 தலைவர்களும் நேருக்கு நேர் – ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்ளும் வரலாற்றுபூர்வ சம்பவம் வியாழக்கிழமை நிகழலாம்.

புடின் வருவதாக இருந்தால் மட்டுமே, நான் துருக்கி செல்வேன் என உறுதியோடு தெரிவித்துள்ளார் செலன்ஸ்கி. வேறு எந்த ரஷிய அதிகாரியையும் தான் சந்திக்கத் தயாராக இல்லை என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், செலன்ஸ்கியை சந்திப்பது குறித்து புடின் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள துருக்கி செல்ல திறந்த மனதுடன் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

புடின் விரைவில் தன் முடிவை அறிவிப்பார் என கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ரஷியாவில் எல்லாமே புடினைச் சார்ந்துதான் செயல்படுவதால், அவரைத் தவிர வேறு யாரையும் சந்திக்கத் தான் தயாராக இல்லை என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் டிரம்பும் கலந்து கொண்டால், புடின் ரஷியாவில் இருந்து பறந்து வர அவருக்குக் கூடுதல் உந்துதலை அந்த நகர்வு வழங்கும் என செலன்ஸ்கி மேலும் தெரிவித்தார்.