எதிர்பார்த்தபடி, ரஷிய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் செலன்ஸ்கியும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. துருக்கிய அதிபர் எர்டோகன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அதே வேளையில், பல்லாண்டு காலமாக மோதலில் ஈடுபட்ட வந்த சிரியாவும் இஸ்ரேலும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபிய வருகையின்போது சிரியாவின் புதிய அதிபர் அகமட் அல் ஷாராவைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்தே இஸ்ரேல் சிரியாவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.