Home உலகம் ஈரோ கிண்ணம் : இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி வாகை சூடியது!

ஈரோ கிண்ணம் : இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி வாகை சூடியது!

259
0
SHARE
Ad

பெர்லின் – ஈரோ கிண்ணம் என்னும் ஐரோப்பிய காற்பந்து சம்மேளனத்தின் போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14 ஜூலை) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

இருநாடுகளும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் போட, அதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைப்படுத்தியது.

ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருக்கும் நிலையில் ஸ்பெயின் மீண்டும் ஒரு கோல் போட்டு முன்னணிக்கு வந்தது.

#TamilSchoolmychoice

ஈரோ கிண்ணத்தை ஸ்பெயின் வெற்றி கொள்வது இது 4-வது முறையாகும்.