Home இந்தியா விக்கிரவாண்டி: திமுக வெற்றியால், பாமக-அதிமுக மீண்டும் இணையுமா?

விக்கிரவாண்டி: திமுக வெற்றியால், பாமக-அதிமுக மீண்டும் இணையுமா?

237
0
SHARE
Ad
அன்னியூர் சிவா

சென்னை : திமகவின் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மறைந்த காரணத்தால் ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆளும் திமுக அபார வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:

திமுக – 1,24,053
பாமக – 56,296
​நாம் தமிழர் கட்சி – 10,602

திமுக கட்சி வேட்பாளர் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால் அந்தக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் பாமக பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக அதிமுக வாக்குகள் திமுகவுக்கே விழுந்தது என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா, பாஜக கூட்டணியில் பாமக சார்பாக சி.அன்புமணி ஆகியோர் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

பாமக தோல்விக்குக் காரணம் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால்தான் எனக் கருதப்படுகிறது. பிரச்சார காலத்தில் அதிமுகவை எதிர்த்து பாஜக தலைவர் அண்ணாமலையும் மற்றவர்களும் பல கருத்துகளை வெளியிட்டனர். இதனால், அதிமுக வாக்குகள் பாமகவுக்குக் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியால் சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் எந்தத் தொகுதியையும் வெல்ல முடியாத நிலைமை ஏற்படலாம் என்பதால், மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாமா என பாமக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கூடுல் கட்சிகளுடன் வலிமையான கூட்டணியை அமைக்க விரும்புகிறது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கள்ளச் சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை, சட்டம் – ஒழுங்கு பிரச்னை என கடுமையான பல எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

வெற்றி பெற்ற அன்னியூர் சிவா திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளராக உள்ளார்.