Home நாடு புகைபிடித்தல் தடை: மக்களிடமிருந்து பெருமளவில் ஆதரவு!

புகைபிடித்தல் தடை: மக்களிடமிருந்து பெருமளவில் ஆதரவு!

1070
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வந்த உணவு வளாகங்களில் புகைபிடித்தல் தடையை மீறியதற்காக இதுவரையிலும் 1,453 எச்சரிக்கைக் கடிதங்களும், 3,879 தனி நபர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்றிலிருந்து, 611 சுகாதார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள், 2,786 உணவகங்களுக்கு வருகைப் புரிந்து கண்காணித்து வந்ததாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

மேலும், இன்று நண்பகல் 12:00 மணி வரையிலும், புகைபிடிப்பதற்கான தடை குறித்து 28 தொலைபேசி அழைப்புகளை அமைச்சு பெற்றதாகக் கூறினார். 

#TamilSchoolmychoice

இவ்விவகாரத்தில் மக்கள் நல்லதொரு வரவேற்பை வழங்குவதோடு, மேலும் , இதனை ஊக்குவிக்கும் பொருட்டு வாட்சப் இணைப்பையும் கூடுதலாக அறிமுகப்படுத்தி, தடைகளை மீறுவோரின் படத்தையும் இணைத்து புகார்கள் செய்யலாம் என அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதத்தில்புகைபிடித்தல் எல்லா உணவகங்களிலும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அமைச்சு அறிவித்தது. அவ்வாறு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகைப் பிடிப்பவர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலும் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும்  விதிக்கப்படும்.

கடை உரிமையாளர்கள் பொதுமக்களை தங்களின் உணவகங்களில் புகைப் பிடிக்க அனுமதித்தால் அவர்களுக்கு 2,500 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.