Home One Line P2 “இந்தி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவதற்கான முன்நகர்வாக, மோடியின் ஒரு நாளைக்கு ஒரு மொழி ஆலோசனை!”- சஷி தரூர்

“இந்தி ஆதிக்கத்திலிருந்து வெளிப்படுவதற்கான முன்நகர்வாக, மோடியின் ஒரு நாளைக்கு ஒரு மொழி ஆலோசனை!”- சஷி தரூர்

745
0
SHARE
Ad

புது டில்லி: எந்தவொரு இந்திய மொழியிலும் ஒரு நாளைக்கு ஒரு வார்த்தையைக் கற்க வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக்கு ஆதரவு அளித்த, காங்கிரஸ் கட்சியின் சஷி தரூர், இந்த நடவடிக்கையானது நாட்டில் இந்தி ஆதிக்கத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு முன்நகர்வு என்று இன்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இம்மொழி சவாலை ஏற்றுக்கொண்டு,  தரூர், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் பன்மைவாதம் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தினமும் மூன்று மொழிகளில் ஒரு மொழியை டுவிட் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மொழித் தடையை நிவர்த்தி செய்வதற்கும், வெவ்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைப்பதற்கும், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று முன்னதாக மோடி வலியுறுத்தியிருந்தார். நாடு முழுவதும் பேசப்படும் 10 முதல் 12 வெவ்வேறு மொழிகளில் ஒரு வார்த்தையை வெளியிடுமாறு பிரதமர் ஊடகங்களுக்கு பரிந்துரைத்தார்.

#TamilSchoolmychoice

எனக்கு ஒரு தாழ்மையான ஆலோசனை உள்ளது. நம்மை ஒன்றிணைக்க மொழியின் சக்தியைப் பயன்படுத்துவோமா? ஊடகங்கள் இதற்கான பாலமாகவும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் முடியுமா? நாடு முழுவதும், 10-12 வெவ்வேறு மொழிகளில் பேசப்படும் ஒரு வார்த்தையை வெளியிடுவதன் மூலம் தொடங்கலாம்என்று நரேந்திர மோடி கொச்சியில் தெரிவித்திருந்தார்.