கோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் தங்களது முழு நேர கல்வியைத் தொடரும் மலேசிய இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்திய உதவித்தொகை & அறக்கட்டளை நிதியுதவிக்கு (Indian Scholarship & Trust Fund-ISTF) விண்ணப்பிக்க கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் அழைக்கின்றது.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
மலேசியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் முழு நேர சான்றிதழ் (Diploma) மற்றும் இளங்கலை (Bachelor) கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த (ISTF) கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கு பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்:
http://hcikl.gov.in/pdf/ISTF-Appln-Form-2019-20.pdf.
தகுதியான மாணவர்கள் தேவையான ஆவணங்களோடு தங்களது விண்ணப்பங்களைக் கீழ்க் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
High Commission of India,
Education Wing (ISTF Scholarship),
Level 28, Menara 1 Mon’t Kiara,
No 1, Jalan Kiara, Mon’t Kiara,
50480 Kuala Lumpur.
Tel: 03 6205 2350 ext 203
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த 2019-20 (ISTF) கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
04.10.2019ஆம் தேதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். தகுதியானவர்கள் மட்டுமே இந்திய உதவித்தொகை & அறக்கட்டளை நிதியுதவியை (ISTF) பெறுவர்.