Home நாடு மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : விஜயலெட்சுமியைத் மீட்கும் பணி நிறுத்தப்பட்டது!

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு : விஜயலெட்சுமியைத் மீட்கும் பணி நிறுத்தப்பட்டது!

719
0
SHARE
Ad
மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன விஜயலெட்சுமி

கோலாலம்பூர்: கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வாரம் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணைத் மீட்கும் பணிகள் இன்றுடன் (செப்டம்பர் 1) நிறுத்தப்பட்டன.

இந்தியத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் விஜயலெட்சுமியின் குடும்பத்தினருக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவரின் குடும்பத்தினரும் அந்த முடிவை ஏற்றுக் கொண்டு அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

விஜயலெட்சுமி இனியும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. எனினும் அவரை நல்லுடல் கிடைக்குமா என்பதற்கான தேடுதல் தொடரும்.

இதற்கிடையில் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நிகழ்ந்த சம்பவம் காரணமாக கோலாலம்பூர் முழுக்க மண் மீதான பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.