Home நாடு ஆப்பிள் ஐபோன் 16 – செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகம்!

ஆப்பிள் ஐபோன் 16 – செப்டம்பர் 9-ஆம் தேதி அறிமுகம்!

540
0
SHARE
Ad

சான்பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு என்பது உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களும், கைப்பேசி பிரியர்களும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போவது அதன் 16-வது பதிப்பாகும். புதிய ஐபோன் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் காணவிருக்கிறது. அதே நாளில் சில முக்கிய நாடுகளில் வெளியீடு காணும். அதைத் தொடர்ந்து உலகின் மற்ற சில நாடுகளிலும் ஐபோன் வெளியீடு காணும்.

மலேசியாவில் எப்போது ஐபோன்16 வெளியீடு காணும் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதன் உத்தேச விலையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

உலக அளவில் கைப்பேசிகள், கையடக்கக் குருவிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகவும், பங்குச் சந்தையில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் ஆப்பிள் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் கோலாலம்பூரில் தனது நேரடி விற்பனைக் கூடத்தைக் கொண்டிருக்கிறது. கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் வட்டாரத்தில் அமைந்துள்ள தி எக்ஸ்சேஞ்ச் டிஆர்எக்ஸ் மால் (The Exchange TRX mall) வணிகப் பேரங்காடியில் ஆப்பிள் விற்பனைக் கூடம் அமைந்திருக்கிறது.